Pages

Saturday, March 19, 2011

உண்மையை சொல்லுங்கள்...!!!! - காதல் கவிதை

உண்மையை சொல்லுங்கள்...!!!!

ஜாதி
மதம்
மொழி
அந்தஸ்து
வேலை
அழகு
காமம்
பணம்
குடும்ப பின்னணி
இவை எல்லாவற்றிற்கும்
அப்பாற்பட்டதுதான் காதல்
என்கிறான் நண்பன்....

பிறகு,
காதலில்
என்னதான் இருக்கிறது...???

அளவு கடந்த அன்புதான் காதல்
என மீண்டும் வாதிடுகிறான்....

அதற்க்கு
ஒரு பூனைக்குட்டியோ
நாய்க்குட்டியோ
போதாதா
நண்பர்களே,தோழிகளே...???
உண்மையை சொல்லுங்கள்...

Wednesday, March 16, 2011

நீயோ நட்புடன் நானோ காதலுடன்...!!!

நீயோ நட்புடன் நானோ காதலுடன். 

கப்பலிலோ
விமானத்திலோ
பேருந்திலோ
புகை வண்டியிலோ
பல மணிநேரம் பயணித்து
உன்னை வந்து பார்க்ககூடிய
தொலைவிலோ நீயில்லை..
பரபரப்பான மாநகர சாலையின் ஓரத்தில்
பொழுது சாய்ந்த மாலையில்
மல்லிகை விற்கும் பெண்ணின்
கூடையில் இருந்து வாசத்தில்
சோடியம் விளக்கின் மஞ்சள் ஒளியில்
உன் ஆக்டிவா வாகனத்தில்
அமர்ந்திருக்கிறாய் நீ..
இரண்டடி இடைவெளியில் நின்றபடி
உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் நான்
ஆனால், இன்னும் எவ்வுளவு தூரமோ
தெரியவில்லை அன்பே உன் இதயம்..!!!
நீயோ நட்புடன் நானோ காதலுடன்...

என்ன சொல்ல போகிறேன் அவனிடம்..!!!

என்ன சொல்ல போகிறேன் அவனிடம்..!!! 

அத்தனை நண்பர்களும் தோழிகளும்
பார்த்து பொறாமை பட்ட
காதல் நம்முடையது ..

ஒன்றாக சேர்ந்து
இரு சக்கர வாகனத்தில்
சிட்டாக பறப்போம்

உனக்கு நானும், எனக்கு நீயும்
புதிய உடைகளை
தேர்வு செய்வோம்

நண்பர்களின் திருமணத்திற்கு
சேர்ந்து சென்று
அங்கு அனைவரையும்
நம்மை பற்றி
கிசுகிசுக்க வைப்போம்

திருமணத்திற்கு பின்
பிறக்கப்போகும் குட்டி பாப்பாவிற்கு
சிறிய கவுன் வாங்கி
உன் தோழிகளின் கிண்டலுக்கு
வெட்கத்தில் சிவந்தோம்

மழையில் நனைந்து ஊர்சுற்றி
ஸ்பென்சர் வளாக
குளுகுளு ஏசியில் நடுங்கி
கைகள் கோர்த்து
ஷாப்பிங் செய்வோம்

இப்படி
ரசித்து ரசித்து
விட்டுக்கொடுத்து வாழ்ந்த நம்மை
காதல் கைவிட்டது ஏனோ தெரியவில்லை..???
நாம் பிரிந்த கணத்தை
இன்னும் என்னால் நம்ப முடியவில்லை
ஆனால் இனி பயனில்லை

சில மாதங்கள் கடந்து
நீயில்லாமல்
தனியாக செல்லும் என்னை
வழிமறித்து
நலம் விசாரித்தபடியே
என் முகத்தில்
உன்னையும் உன் நலத்தையும்
தேடுகிறான்,
நாம் பிரிந்த செய்தி
அறியாத என் நண்பன்..!!!

எந்த தேசத்தில்
எந்த ஊரில்
எந்த வீத்யில் நீ
என்ன சொல்ல போகிறேன் அவனிடம்..!!!

கடவுளின் நண்பன்..!!!

கடவுளின் நண்பன்..!!! - நண்பர்கள் கவிதை

கடவுளின் நண்பன்..!!! 

நீ
எனக்கு
இருக்கும்
தைரியத்தில் தான் நண்பா,
என்
வேண்டுதல்கள்
தேவைகள்
எதிர்பார்ப்புகள்
எதையும்
கடவுள்
கண்டுகொள்வதேயில்லை...!!!

"எனக்கு மட்டுமல்ல"
நீ கடவுளுக்கும் மிக
நம்பிக்கையானவன்...!!!

இதயம் நனைத்த முரளி...!!!

இதயம் நனைத்த முரளி...!!!

 

பூவிலங்கில் முகம் பதித்தாய்
பகல் நிலவில் நட்சத்திரமானாய்
இப்படியாய் எங்களை மெல்லமெல்ல
உன் வசம் இழுத்தாய்.....!!!

பெண்களிடம் காதலை தவிர்த்து
கறைபடாத நட்புடன்
கடைசி வரை வாழலாமென
புது வசந்தத்தில்
நட்ப்பிற்கே கற்பு அளித்தாய்...!!!

இதயத்தின் மூலம்
இளசுகளின் இதயத்தில்
மீண்டும் வெளியேறா வாசலை
அடைத்துவிட்டு உள்ளே நுழைந்தாய்...!!!

''இந்த பாதங்கள்
மண் மீது நடப்பதற்க்கல்ல
மலர்கள் மீது ''
என்று
நீ வாசித்து நடித்ததாகட்டும்
இதயமே இதயமே..... என
நீ உருகி பாடி நடித்த பாடலாகட்டும்
அதற்க்கு ஈடாகுமா
இங்கு எங்களின் கிறுக்கல்கள்...!!!

ஆனந்தம் ,பொற்காலம் தொடர்ந்து
'கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு"
என உனக்கான பாடலில்
எங்களை போன்ற கருப்பான
காளைகளை காலரை தூக்கிவிட்டு
நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைத்த
பெருமை என்றுமே உனக்கல்லவா.....!!!

பாணா காத்தாடியில்
உன் மகனுக்கே ஒரு நண்பனாய்
காதலை பற்றி அறிவுரை கூறிவிட்டு
நான் மருத்துவுக்கல்லூரியின்
இறுதியாண்டு மாணவன் என
உன்னை அறிமுகபடுத்தி போகும் காட்சியில்
உனக்கான கைதட்டல்களை
அள்ளிசென்றாய்.....!!!

ஆனால்..,
இதுதான் உனக்கான
கடைசி கைதட்டல்கள் என்பதை அறியாமல்
அதில் பங்குகொள்ளாமல்
ஒரு மௌன புன்னகையோடு
இருந்துவிட்டு நான் இழந்த அந்த
நிமிடங்களை நினைத்து வருந்துகிறேன்
விழியோரமாய் நீருடன்....!!!

உன் ஆன்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும் ஒரு ரசிகன்
உன் சினிமா குடும்பத்தின்
ஒரு ஊழியன்.....!!!